கோமுகி சர்க்கரை ஆலை தேர்தல் திமுக, அதிமுகவை சேர்ந்த 17 பேர் தேர்வு சின்னசேலம், அக். 12:

கச்சிராயபாளையம் கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் இயக்குநர்கள் தேர்தல் நேற்று காலை நடைபெற இருந்தது. இதையடுத்து தேர்தலில் போட்டியிட ஆலையில் அங்கத்தினர்களாக உள்ள திமுக, அதிமுகவை சேர்ந்த  140க்கும் மேற்பட்டோர் வேட்பு மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜசேகரன் மற்றும் அலுவலர்கள் நேற்றுமுன்தினம் மனுக்களை பரிசீலனை செய்து  57 பேர் கொண்ட பட்டியலை வேட்பாளர்களாக அறிவித்து அறிவிப்பு பலகையில் ஒட்டினார்கள். அதில் திமுகவில் தலைவர் வேட்பாளரான அருணாசலம், ராமமூர்த்தி, பூவராகவன், சிவலிங்கம். வள்ளி உள்ளிட்டோரும், அதிமுகவில் தலைவர் வேட்பாளர் ராஜசேகர், நகர செயலாளர் பாபு, திருநாராயணன், தங்கபாண்டியன், அமுதா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.நேற்று இயக்குநர் தேர்தல் நடைபெற இருந்த நிலையில், நேற்றுமுன்தினம் மாலை திமுக, அதிமுகவினரிடையே சுமூக பேச்சு

வார்த்தை நடைபெற்றது. இதையடுத்து திமுகவை சேர்ந்த அருணாசலம், ராமமூர்த்தி, சிவலிங்கம், முருகன், மல்லிகா, சாமுண்டீஸ்வரி ஆகிய 6 பேர் இயக்குநர்களாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதிமுகவில் கள்ளக் குறிச்சி ஒன்றிய செயலாளர் ராஜசேகர், நகர செயலாளர் பாபு, அமுதா, தங்க பாண்டியன், சந்திரன், சாமிதுரை, திருநாராயணன் உள்ளிட்ட 11 பேர் இயக்குநர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று தலைவர், துணைத்தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.

Related Stories: