×

மருத்துவ திட்டத்தில் சிகிச்சை பெற பென்ஷனர்கள் அலைகழிப்பு

புதுச்சேரி, அக். 12: புதுச்சேரி பென்ஷனர்கள் சங்க கவுரவ தலைவர் பாலமோகனன், செயலாளர் நடராஜன் ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
புதுச்சேரி மாநில அரசு ஓய்வூதியர்களின் மருத்துவப்படியை ரூ.1000 ஆக உயர்த்தி 2017 ஜூலை முதல் வழங்க வேண்டும். அரசு நிதிஉதவி தனியார் பள்ளி மற்றும் உள்ளாட்சித்துறை ஓய்வூதியர்களுக்கும் மருத்துவப்படி வழங்க வேண்டும். 7வது ஊதியக்குழு அமலாக்க நிலுவைத்தொகை, பஞ்சப்படி நிலுவைத்
தொகையை உடனே வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்களுக்கு பணிக்கொடை, விடுப்பு ரொக்கமாக்குதல், முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும். புதுச்சேரி மாநில அரசு ஓய்வூதியர்கள் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்களுக்கு கடந்த மே 1ம் தேதி முதல் பங்களிப்பு மருத்துவ சிகிச்சை வசதி திட்டம் அவசர கோலத்தில் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சை பெற பென்ஷனர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். உள்ளாட்சித்துறை பென்ஷனர்களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். பென்ஷனர்களின் குறைகளை அங்கேயே தீர்த்திட வகை செய்யும் பென்ஷன் அதாலத் கூட்டங்களை 6 மாதத்திற்கு ஒருமுறை அனைத்து துறைகளும் நடத்திட உத்தரவிட வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 15ம் தேதி தலைமை தபால் நிலையம் எதிரே தர்ணா போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...