×

சித்தர்கள் கோட்டம் சார்பில் பாபநாசத்தில் கலை இலக்கிய விழா

வி.கே.புரம், அக். 11:  வற்றாத ஜீவநதியான தாமிரபரணியில் 144 ஆண்டுகளுக்குப் பிறகு மகா புஷ்கர விழா இன்று(11ம் தேதி) துவங்கி 22ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி பாபநாசத்தில், பாபநாசம் சித்தர்கள் கோட்டம் சார்பில் கடந்த 4ம் தேதி கால்நாட்டு ைவபவத்துடன் விழா துவங்கியது. 5ம் தேதி  திருவாசகம் முற்றோதுதல், 6ம் தேதி   தேவாரம் முற்றோதுதல், 7ம் தேதி நெல்லை மாவட்ட  ஆதிபாரசக்தி மன்றம் சார்பில் தீப வழிபாடு,  8ம் தேதி ஐயப்ப சேவா சங்கம் சார்பில் ஐயப்ப வழிபாடு, நேற்று முன்தினம் டாணா சமரச சுத்த சன்மார்க்க சங்கம் சார்பில் திருவருட்ப அகவல் முற்றோதுதல் நடந்தது. நேற்று கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு ஓவியர் சந்துரு தலைமையில்  தாமிரபரணி நதி குறித்த ஓவியப்போட்டியும், கவிைத போட்டியும் நடந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாலையில் 25 கவிஞர்கள் கலந்து கொண்ட தாமிரபரணி பற்றிய கவியரங்கம் நடந்தது. முன்னதாக சுவாமி ராஜனீஸ்வரன் தலைமையில்
தாமிரபரணியை காப்போம் என்று மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.தொடர்ந்து நடந்த கலைநிகழ்ச்சியில்   முருகநாதன், தங்கமணி, நிதிக்குழு தங்கத்துரை, நிர்வாக குழு பூக்கடை கண்ணன், பேராசிரியா வல்சகுமார், கவிஞர் பாரதிகண்ணன், ஓவியர்  வள்ளிநாயகம் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.   இன்று முதல் 22ம் தேதிவரை தினமும் மாலையில் தமிழ் ஆகம முறைப்படி தாமிரபரணியில் 16 வகையான தீப ஆரத்தி நடக்கிறது. இன்று மாலை நடைபெறும் தீப ஆரத்தி விழாவை மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைக்கிறார். இதில் பாஜ மாநில  பொருளாளர் சேகர், பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் தயாசங்கர், பேயன்விளை தொழிலதிபர் பிரபு, ராமேஸ்வரம் தொழிலதிபர் சபரிநிக்‌ஷன், திருவாரூர் கிழக்கு மாவட்ட பாஜ தலைவர் முத்துகணேஷ் மற்றும் தூத்துக்குடி தொழிலபதிபர்கள் சுரேஷ், மாறவர்மன் என்ற விஜய் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

Tags : Art Literary Festival ,Papanasam ,
× RELATED பாபநாசம் அருகே 4 கிராம மக்கள் தேர்தல்...