×

கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பஸ் கண்டக்டர் உரிமம் ரத்து கலெக்டர் நடவடிக்கை வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு

திருவண்ணாமலை, அக்.12: வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பஸ் கண்டக்டர் உரிமம் ரத்து செய்து, கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார்.வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் தனியார் பேருந்தில் அரசு நிர்ணயித்த கட்டணத்துக்கு பதிலாக கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக கலெக்டர் கே.எஸ்.கந்தசாமிக்கு புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து அவரது உத்தரவின்பேரில் கடந்த மாதம் 30ம் தேதி திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சம்பந்தப்பட்ட தனியார் பஸ்சை ஆய்வு செய்தனர்.
அப்போது வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு ஒரு நபருக்கு ₹56க்கு பதிலாக கூடுதலாக ₹14 சேர்த்து ₹70 வசூலித்தது தெரியவந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட தனியார் பஸ்சின் கண்டக்டர் போளூர் தாலுகா சாலகொட்டாய் கிராமத்தை சேர்ந்த பெருமாள் என்பவரின் கண்டக்டர் உரிமத்தை ரத்து செய்ய கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டார்.  இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்` திருவண்ணாமலை மாவட்டத்தில் இனி வரும் காலங்களில் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்துக்கு அதிகமாக வசூலித்தால் வாகன உரிமையாளர்கள் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்ைக எடுப்பதோடு, மோட்டார் வாகன சட்டப்படி அனுமதிசீட்டு மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்று கூறி உள்ளார்.

Tags : Tiruvannamalai ,Vellore ,
× RELATED சித்ரா பவுர்ணமியையொட்டி பக்தர்களின்...