×

ஆதிதிராவிடர் பகுதிகளில் 150 திருக்கோயில்கள் தேர்வு திருப்பணிகள் விரைவில் துவக்கம் வேலூர் உட்பட மூன்று மாவட்டங்களில்

வேலூர், அக்.12: வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பகுதிகளில் உள்ள திருக்கோயில் திருப்பணி திட்டத்தின் கீழ் 150 கோயில்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இக்கோயில்களில் விரைவில் திருப்பணிகள் தொடங்க இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.வசதிப்படைத்த திருக்கோயில் நிதியில் இருந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பகுதிகளில் உள்ள கோயில்களில் திருப்பணி மேற்ெகாள்ளப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு கோயிலுக்கும் ₹25 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த 2011-12ம் ஆண்டு ஒதுக்கப்படும் நிதி திருப்பணிகள் மேற்கொள்ள போதுமானதாக இல்லை என்பதால் நிதி ₹50 ஆயிரமாக உயர்த்தி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். பின்னர் இந்த நிதி ₹1 லட்சமாக உயர்த்தப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் இப்போது வரை மொத்தம் 5 ஆயிரத்து 160 கோயில்களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த 2017-18ம் ஆண்டு மாநிலம் முழுவதும் 1,019 ஆதிதிராவிடர் பழங்குடியினர் பகுதி கோயில்களில் திருப்பணி செய்ய ₹10 கோடியே 19 லட்சம் நிதி தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.இதில் வேலூர் இணை ஆணையர் கட்டுப்பாட்டில் உள்ள வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மொத்தம் 150 திருக்கோயில்கள் திருப்பணி மேற்கொள்ள அடையாளம் காணப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டத்தில் 44 கோயில்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. விரைவில் இக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : monasteries ,districts ,Vellore ,
× RELATED கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை