×

திருவள்ளூர் தொகுதியில் அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் அவதி

திருவள்ளூர், அக். 12: திருவள்ளூர் தொகுதிக்கு உட்பட்ட பல கிராமங்களில் உள்ள பிரச்னைகள் குறித்து உடனடியாக நடவடிக்கையை எடுக்கக்கோரி கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் திமுக எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் கோரிக்கை மனு கொடுத்தார்.
திருவள்ளூர் தொகுதிக்கு உட்பட்ட திருவள்ளூர் நகரம், திருவாலங்காடு, கடம்பத்தூர், பூண்டி ஆகிய ஒன்றியங்களில் 150 கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் உள்ள மேல்நிலை மகுடிநீர் தேக்கத் தொட்டிகளை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கனகவல்லிபுறம் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் நிலுவையில் உள்ள இரு மேம்பாலங்களை உடனடியாக கட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். நிர்வாக அனுமதி பெற்றும் நிலுவையில் உள்ள பைபாஸ் சாலை அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும்.

திருப்பாச்சூர் ஏரிக்கு செல்லும் வரவு கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பேரம்பாக்கத்தில் கூவம் ஆற்றின் குறுக்கே உடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும். திருவள்ளூர் வரதராஜ நகர், மணவாளநகர் தரைப்பாலத்தை பழுதுபார்த்து சீரமைக்க வேண்டும்’’ என பல கோரிக்கைகள் குறித்து விளக்கியதோடு, கோரிக்கை மனுவும் கொடுத்தார்.மேலும், இதுகுறித்து ஏற்கனவே இருந்த மாவட்ட கலெக்டரிடமும் மனு கொடுத்துள்ளதை கூறினார். இதையடுத்து, கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்தார்.

Tags : constituency ,facilities ,Tiruvallur ,
× RELATED கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில்...