×

திருத்தணி முருகன் கோயிலில் நவராத்திரி விழா தொடக்கம்

திருத்தணி, அக். 12: திருத்தணி முருகன் கோயிலில் நவராத்திரி விழா துவங்கியதை அடுத்து தினமும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. திருத்தணி முருகன் மலைக்கோவிலில் நேற்று முன்தினம் முதல் நவராத்திரி விழா துவங்கியது. வரும் 20ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி கோயில் வளாகத்தில் நேற்று முன்தினம் காலை யாகசாலை பூஜை நடந்தது. உற்சவர் கஜலட்சுமி அம்மையார் சிறப்பு அலங்காரத்தில், அன்ன வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.முன்னதாக நவராத்திரி விழாவை கோவில் தக்கார் ஜெய்சங்கர் துவக்கி வைத்தார். தினமும் மாலை 6.30 மணியளவில் உற்சவர் கஜலட்சுமி அம்மன் அன்ன வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார்.
இதேப்போல் திருத்தணி, சேகர்வர்மா நகர், சக்தி விநாயகர், மடம் கிராமத்தில் உள்ள வன துர்க்கையம்மன், ஆறுமுக சுவாமி கோயில் தெருவில் உள்ள தணிகை மீனாட்சி அம்மன், பழைய பஜார் தெரு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆகிய கோவில்களிலும் நேற்று முன்தினம் நவராத்திரி விழா துவங்கியது.

Tags : Navratri festival ,Thiruthani Murugan Temple ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலில் 2ம் நாள்...