×

சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம், அக்.12: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 159 சத்துணவு அமைப்பாளர் மற்றும் 127 சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு தகுதியுடைய பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து மனுக்கள் வரவேற்கப்படுகிறது.  நவ.1ம் தேதி வரை அலுவலக வேலை நாட்களில் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய, நகராட்சி அலுவலகங்களில் வழங்கப்படும். மேலும் http://kancheepuram.nic.in என்ற இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.  சத்துணவு அமைப்பாளர் பணிக்கு, பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1-7-2018 அன்று 21 வயது பூர்த்தி அடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். சமையல் உதவியாளர் பணிக்கு: பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 5ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி, 1-7-2018 அன்று 21 வயது பூர்த்தி அடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.  விண்ணப்பிக்கும் பணியிடத்திற்கும், விண்ணப்பதாரரின் குடியிருப்புக்கும் இடையே உள்ள தூரம் 3 கி.மீக்குள் இருக்க வேண்டும்.

ஊதிய விகிதம்:  சத்துணவு அமைப்பாளர் பணிக்கு ₹7700 - 24200 என்ற ஊதிய விகிதத்தின்கீழ் மற்றும் சமையல் உதவியாளர் பணிக்கு ₹3000 - 9000 என்ற ஊதிய விகிதத்தின்கீழ் ஊதியம் வழங்கப்படும். சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கான இனசுழற்சி குறித்த விவரங்களை சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய, நகராட்சி அலுவலகங்களில் தெரிந்துகொள்ளலாம். நவ.1ம் தேதி மாலை 5.45 மணிவரை பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே உரிய பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். தகுதிவாய்ந்த மனுதாரர்களுக்கு மட்டும் நேர்முகத் தேர்வுக்கான அழைப்பாணை அனுப்பப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags : Nutrient organizer ,
× RELATED கே.வி.குப்பம் அருகே சத்துணவு அமைப்பாளரிடம் 5 சவரன் பறிப்பு