கலெக்டர் அலுவலகம் அருகே பரபரப்பு குடிநீர் கேட்டு பெண்கள் போராட்டம்

சேலம், அக்.11:  சேலம் மாவட்டம் தாரமங்கலம் அடுத்த சின்னப்பம்பட்டி வணிச்சம்பட்டியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தனர். கையில் காலிகுடங்களுடன் வந்த அவர்கள், திடீரென நாட்டாண்மை கழக கட்டிடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், ‘‘தாரமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட துட்டம்பட்டி ஊராட்சியில், வணிச்சம்பட்டி காட்டுவளவு, சொட்டையன் காடு ஆகிய பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம்.

எங்களுக்கான குடிநீர் இணைப்பை அப்பகுதியைச் சேர்ந்த சிலர், சொந்த பயன்பாட்டிற்காக அபகரித்து கொண்டனர்.  இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தோம். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், தாரமங்கலம் பிடிஓ மற்றும் பஞ்சாயத்து கிளார்க் ஆகியோர் எங்களுக்குள் மோதலை உருவாக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். எனவே, இருவர் மீது நடவடிக்ைக எடுப்பதுடன், தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: