×

ஜலகண்டாபுரத்தில் 10.7 டன் கொப்பரை ரூ10 லட்சத்திற்கு ஏலம்

ஜலகண்டாபுரம், அக்.11:  சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தில், திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க, கொங்கணாபுரம் கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் கொப்பரை ஏலம் நடைபெறும். இந்த வாரம் ஏலத்தில் ஜலகண்டாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 210 மூட்டைகளில் 10,700 கிலோ ெகாப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதை வாங்க சேலம், ஈரோடு, நாமக்கல் பகுதியை சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்தனர். ஏலத்தில் ஒரு கிலோ கொப்பரை குறைந்தபட்சமாக ரூ80 க்கும், அதிகபட்சமாக ரூ92.65 க்கும் விற்பனையானது. ஓட்டு மொத்தமாக விவசாயிகள் கொண்டு வந்த 10.7 டன் கொப்பரை, ரூ10 லட்சத்திற்கு விற்பனையானதாக கூட்டுறவு சங்க அதிகாரி தெரிவித்தார்.

Tags : auction ,Jalakandapuram ,
× RELATED 5 கோடி ரூபாய்க்கு டைட்டானிக் மரக்கதவு ஏலம்