×

ஆத்தூர் அரசு மருத்துவமனையில் கிடப்பில் போடப்பட்ட டயாலிசிஸ் கருவிகள்

ஆத்தூர், அக்.11: ஆத்தூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் வசதிக்காக ரூ14 லட்சத்தில் வழங்கப்பட்ட 2 டயாலிசிஸ் கருவிகள், பயன்படுத்தப்படாமல் 3 மாதமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆத்தூர் அரசு மருத்துவமனையில் நாள்தோறும் சிகிச்சை பெறுவதற்காக,  சுற்றுவட்டார கிராமங்களை ேசர்ந்த 500க்கும் மேற்பட்டோர் வந்து  செல்கின்றனர். இந்நிலையில்  கடந்த 3 மாதத்துக்கு முன், ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு வரும் கிட்னி  பாதித்த ேநாயாளிகள் வசதிக்காக, கள்ளக்குறிச்சி அதிமுக எம்.பி காமராஜ், தனது  தொகுதி மேம்பாட்டு நிதி ரூ14 லட்சத்தை ஒதுக்கியதில், 2 டயாலிசிஸ் கருவிகள்  வாங்கப்பட்டது. ஆனால் இந்த கருவிகள், இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல்  கிடப்பில் போட்டு வைத்துள்ளனர். இதையறிந்த எம்பி காமராஜ்,  நேற்று ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது டயாலிசிஸ் கருவிகள்  பயன்படுத்தப்படாமல் கிடப்பில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து மருத்துவர்களிடம் கேட்ட போது,  கருவிகளை பொருத்தும் பணியை முடித்து, மருத்துவமனை  நிர்வாகத்திடம் ஒப்பந்ததாரர் இன்னும் ஒப்படைக்கவில்லை என்றனர். இதையடுத்து, டயாலிசிஸ்  கருவிகளை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்ற அவர், ஏழை  மக்களுக்கு இலவச சிகிச்சை வழங்க வாங்கிய இயந்திரத்தை, செயல்பாட்டுக்கு கொண்டு வராத அரசு மருத்துவர்களின் செயல் வேதனையளிப்பதாக  தெரிவித்தார். இந்த ஆய்வின் போது டிஆர்ஓ சுகுமார், ஆத்தூர் எம்எல்ஏ  சின்னதம்பி, ஆர்டிஓ செல்வன், தாசில்தார் செல்வம், ஒன்றிய ஆணையாளர்  குணசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Attur Government Hospital ,
× RELATED ஆத்தூர் அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே மையத்தில் தீ விபத்து