×

நாமக்கல்லில் திமுக சார்பில் நோட்டீஸ் விநியோகம்

நாமக்கல், அக்.11: நாமக்கல்லில், அமைச்சர்களின் ஊழல் பட்டியலை நோட்டீஸ் மூலம் திமுகவினர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை, மக்களிடம் செல்வோம், மாற்றம் காண்போம் என்ற தலைப்பில், நாமக்கல் நகர திமுக மற்றும் மாவட்ட கலை இலக்கிய பேரவை சார்பில், நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. நேற்று நாமக்கல் பஸ் ஸ்டாண்ட், பூங்கா ரோடு, கடைவீதி ஆகிய இடங்களில் பொதுமக்களிடம், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் காந்திசெல்வன் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில், நகர திமுக பொறுப்பாளர் மணிமாறன், மாவட்ட கலை இலக்கிய பேரவை பகுத்தறிவு அமைப்பாளர் ஆனந்தன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ஆனந்த், நந்தகுமார், கலை இலக்கிய பேரவை துணை அமைப்பாளர் மார்ட்டீன், முன்னாள் கவுன்சிலர் ரவி, செல்வமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Namakkal ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி