×

ஏசி இயந்திரங்கள் மூலம் வெளிவகும் நச்சுப்புகையை தடுக்கும் கருவி கண்டுபிடிப்பு

திருச்செங்கோடு, அக்.11: திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில், மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி நடந்து வருகிறது. இதில், மாணவ, மாணவிகள் தங்கள் கண்டுபிடிப்புக்களை காட்சிக்கு வைத்துள்ளனர். இதில், திருச்செங்கோடு விவேகானந்தா வித்யாபவன் மாணவி லட்சுமிபிரியாவின் கண்டுபிடிப்பு அனைவரையும் கவர்ந்தது. காருக்குள்ளும், வீட்டிற்குள்ளும் ஏசி இயந்திரத்திலிருந்து வரும் நச்சுப்புகை உயிரிழப்புக்கு பெரிதும் காரணமாகிறது. உறங்கும்போது இது போன்ற அசம்பாவிதம் ஏற்பட்டால், உயிரிழப்பை தடுக்க முடியாமல் போகிறது. மாணவி லட்சுமி பிரியாவின் அறிவியல் கண்டுபிடிப்பு, மிகவும் சிறிய வகையில் கைக்கு அடக்கமானது. எலக்ட்ரானிக் சென்சார்கள் மூலம் இது வேலை செய்கிறது.

இந்த கருவியை வீட்டிலோ, காரிலோ மாட்டி விட்டால், எந்த நச்சுப்புகை கசிந்தாலும் அதனை இக்கருவி கண்டுபிடித்து, எஸ்எம்எஸ் மூலம் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தெரிவித்து விடுகிறது. மேலும், அதிக சத்தத்துடன் அலாரம் அடிக்கும். வீட்டிற்கு வெளியேயும் இந்த அலாரம் அடிக்கும்படி, இந்தக் கருவியை  மாற்றிக்கொள்ளலாம். இக்கருவியை தயாரிக்க ரூ5 ஆயிரம் செலவாகும். வணிக முறையில் அதிகம் தயாரித்தால், தயாரிப்பு செலவு குறையும். கருவியை கண்டுபிடித்த மாணவியை விவேகானந்தா கல்லூரி தாளாளர்  கருணாநிதி, எஸ்பி அருளரசு ஆகியோர் பாராட்டினர்.

Tags : AC ,
× RELATED பாஜக கூட்டணியில் உள்ள புதிய நீதிக்...