×

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

மயிலாடுதுறை, அக்.11:  மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கல்வி மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையேயான அறிவியல் கண்காட்சி  நடைபெற்றது. மாவட்ட கல்வி அலுவலர் குமரன் தலைமை வகித்தார். டிபிடிஆர் தேசிய மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காஞ்சிநாதன் முன்னிலை வகித்தார். ஆர்டிஓ.,தேன்மொழி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தார். கண்காட்சியில் பல்வேறு பள்ளி மாணவர்கள் மின்சாரம் மற்றும் சூரியஒளியில் இயங்கும் மின்சாரம் தயாரிக்கும் கருவி, தானியங்கி கோடு போடும் கருவி, காற்று மாசுபாட்டை தடுக்கும் கருவிகள், தண்ணீர் இறைக்கும் இயந்திரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பல்வேறு வகையான காட்சி அரங்குகள் அமைத்திருந்தனர். இதில் மயிலாடுதுறை கல்வி மாவட்டத்தை சேர்ந்த 86 பள்ளிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலர்கள் முத்தெழிலன், பீட்டர்பிரான்சிஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர். பெரம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அன்புசெல்வி நன்றி கூறினார்.  

சீர்காழி:  பள்ளி கல்வித்துறை சார்பில் சீர்காழி ஒன்றிய அளவிலான பள்ளிகளுக்கிடையே அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. சீர்காழி  நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற ஒன்றிய அளவிலான அறிவியல் கண்காட்சியில்  பல்வேறு பகுதிகளிலிருந்து 17 நடுநிலைப்பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். சீர்காழி வட்டார கல்வி அலுவலர் பூவராகன் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் லெட்சுமி முன்னிலை வகித்தார். சீர்காழி கல்வி மாவட்ட அலுவலர் தியாகராஜன் கண்காட்சியை தொடங்கி வைத்து மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டு விளக்கங்களை கேட்டறிந்தார். இதில் வட்டார ஆசிரியர் பயிற்றுனர் விஜயலெட்சுமி, அண்ணன்கோயில் பள்ளி தலைமை ஆசிரியர் கல்யாணரெங்கன், நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஷகிலா ரத்தினகுமாரி, ஆசிரியர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Science Exhibition ,School ,
× RELATED திருப்பாலைக்குடி அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி