×

மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு

வேதாரண்யம்,அக்.11: வேதாரண்யம் தாலுகா புஷ்பவனம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு வருகை தந்த மாவட்ட கல்வி அலுவலர் வேதரெத்தினம், ஆய்வு மேற்கொண்டு பின் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சுகாதாரம் பற்றியும் பள்ளியையும் நாம் இருக்கும் இடத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டிய அவசியம் குறித்தும் டெங்கு காய்ச்சலால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் அதன் விழிப்புணர்வு பற்றியும் எடுத்துரைத்தார். மேலும் கை கழுவுவதலின் அவசியத்தை எடுத்து கூறினார்.

மாணவ-மாணவிகள் மழைக்காலத்தில் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். பின் பள்ளியில் உள்ள செஞ்சிலுவை சங்கம் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களிடம் டெங்கு விழிப்புணர்வு பற்றி எடுத்துக்கூறி இதனை மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும் என வலியுறுத்தினார். நிகழ்ச்சியில் பள்ளி இணை ஆய்வாளர் ராமநாதன், பள்ளி தலைமையாசிரியர் தொல்காப்பியன் மற்றும் பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED ஆட்டம் பாட்டத்துடன் நடந்த அனல் பறக்கும் பிரசாரம் ஓய்ந்தது