கண்மாய் நிரம்பிய பின் கால்வாய் சீரமைப்பு பணி

சோழவந்தான், அக்.11: சோழவந்தான் அருகே தேனூர் புதுக்குளம் கண்மாய் இடையே பராமரிப்பின்றி உள்ள கால்வாயை கண்டுகொள்ளாத அதிகாரிகள் கண்மாய் நிறைந்த பின் அவசர, அவசரமாக பணிகளில்

ஈடுபட்டுள்ளனர்.மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மதுரை-திண்டுக்கல் நான்குவழிச்சாலை திருவாலவாயநல்லுார் பிரிவு அருகே புதுக்குளம் கண்மாய் உள்ளது. வைகை பெரியாறு கால்வாய் மூலம் பாசன வசதிபெறும் இந்த கண்மாய் 8 ஆண்டுகளுக்கு பின் நிரம்பி தற்போது மறுகால் பாய்ந்துள்ளது. இந்த மறுகால் நீர் தேனூர் கண்மாய்க்கு செல்வதற்குரிய கால்வாய் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றியும், ஆக்கிரமிக்கப்பட்டும் இருந்தது. இதனால் தண்ணீர் செல்ல வழியின்றி தேங்கி நின்றதால் கண்மாய் மற்றும் நான்கு வழிச்சாலை பகுதியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகும் நிலை     உருவானது. ஏற்கனவே கால்வாயை தூர்வாரி சீரமைக்ககோரி கடந்த மாதம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மனு அளித்தபோது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள், தற்போது கால்வாய் சீரமைப்பு பணிகளை அவசரகதியில் செய்து

வருகின்றனர். எனவே கண்மாய்க்கு வரும் நீர் தடையின்றி செல்வதற்கான நிரந்தர தீர்வு கிடைக்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: