×

தூத்துக்குடியிலிருந்து திருவண்ணாமலைக்கு சரக்கு ரயிலில் 1,264 டன் உரம் வருகை

திருவண்ணாமலை, அக்.10: தனியார் உரம் விற்பனை மையங்களுக்கு விநியோகம் செய்ய தூத்துக்குடியிலிருந்து 1,264 டன் உரம் சரக்கு ரயில் மூலம் நேற்று திருவண்ணாமலை கொண்டுவரப்பட்டு சரக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கும், பருவமழை தொடங்கி உள்ளதால் சம்பா நெல் பயிரிட உள்ள விவசாயிகளுக்கும் போதிய உரம், யூரியா தட்டுப்பாடு இன்றி கிடைக்க மாவட்டத்தில் உள்ள தனியார் உரம் விற்பனை மையங்களுக்கு விநியோகம் செய்ய தூத்துக்குடியிலிருந்து வேம்பு கலந்த யூரிய 604 டன், டிஏபி 660 டன் என ெமாத்தம் 1,264 டன் உரம் சரக்கு ரயில் மூலம் நேற்றுமுன்தினம் இரவு திருவண்ணாமலை ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது.

பின்னர், நேற்று மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் விற்பனை மையங்களுக்கு சரக்கு லாரிகள் மூலம் உரம், யூரியா மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 200 டன் உரம் இருப்பு குடோனிற்கு கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டது. மீதமுள்ள அனைத்து உரங்களும் அந்தந்த விற்பனை மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியார் மற்றும் ெதாடக்க வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கங்களில் 2,700 டன் யூரியா, 1,500 டன் டிஏபி, 1,680 டன் பொட்டாஷ், 3,050 டன் காம்ப்ளக்ஸ் ஆகிய உரங்கள் இருப்பு உள்ளதாக வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Tuticorin ,cargo passengers ,Tiruvannamalai ,
× RELATED ஆணாக மாறிய தோழியிடம் இருந்து...