×

தா.பழூர் ஒன்றிய முடிதிருத்துவோர், மருத்துவ நல சங்க முப்பெரும் விழா

தா.பழூர்,அக். 9: தா.பழூர் ஒன்றிய முடிதிருத்துவோர் மற்றும் மருத்துவ நல சங்க முப்பெரும் விழா நடந்தது.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் முடிதிருத்துவோர் மற்றும் மருத்துவ நல சங்க முப்பெரும் விழா தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதையொட்டி தா.பழூர் அண்ணா சிலையில் தொடங்கி பேரணி முக்கிய வீதிகள் வழியாக தனியார் மண்டபம் சென்றடைந்தது. விழாவிற்கு மாநில துணை தலைவர் கலியபெருமாள் தலைமை வகித்தார் விழாவில் சங்க மாநில தலைவர் செல்வராஜ் சிறப்புரையாற்றினார் அரியலூர் மாவட்ட இணை செயலாளர் சேட்டு, அரியலூர் மாவட்ட கிளை துணை செயலாளர் சபரிநாதன் தற்போதைய தா.பழூர் ஒன்றிய தலைவர் ராஜேஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினர் மல்லிஸ்பாபு, சண்முகம், சங்கர், ராஜா ஆகியோர் பேசினர். விழாவில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் நமது சமூகத்திற்கு தமிழக அரசின் அனைத்து சலுகை விலையிலும் 5 சதவீதம் இட ஒதுக்கீடு கோரி தீவிரமாக போராட வேண்டும். சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சென்னையில் அறக்கட்டளை மூலம் சொந்த கட்டிடம் கட்டுவது. நலவாரியத்தில் உறுப்பினராக இருக்கும் முடிதிருத்தும் தொழிலாளர்களின் ஓய்வூதிய தொகையாக ரூ.5000 பெற்று தருவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன விழாவில் துரை, மாதவன், மணிகண்டன், சிவா, அறிவழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அரியலூர் மாவட்ட செயலாளர் சாமிநாதன் வரவேற்றார். முடிவில் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.

Tags : Bharur Union Hairdressers and Medical Welfare Society ,ceremonies ,
× RELATED ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில்...