×

அரியலூரில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரியலூர்,அக்,9: அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு விழா நடந்தது.அரியலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தகவல் பெறும் உரிமை சட்ட வார விழா  முன்னிட்டு நாட்டுப்புற கலை குழுவின் விழிப்புணர்வு நிகழ்ச்சியினை கலெக்டர் விஜயலட்சுமி, தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், கலெக்டர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முழுவதும் தகவல் ஆணையம் ஆண்டுதோறும் அக்டோபர் 5 முதல் 12 வரை தகவல் பெறும் உரிமை சட்ட வார விழாவை கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கலெக்டர் அலுவலகம், பேருந்துநிலையம் ஆகிய பல்வேறு இடங்களில் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் நலிவுற்ற நாட்டுப்புற கலைஞர்களை கொண்டு தகவல் பெறும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இக்குழுவினர் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் பல்வேறு இடங்களில் தகவல் பெறும் உரிமை சட்டம் குறித்து, வீதிநாடகம், தப்பாட்டம், கரகாட்டம், விழிப்புணர்வு பாடல்கள் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மூலம் பொது மக்களிடம் நாட்டுப்புற காலைஞர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Ariyalur ,
× RELATED அரியலூரில் முன்னேற்பாடு பணி ஆய்வு...