×

குடிநீர் தொட்டி கட்ட எதிர்ப்பு பள்ளியில் பெற்றோர் முற்றுகை


திருப்பூர், அக்.5: திருப்பூர் இடுவம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பள்ளிக்கு பின்புறம் உள்ள காலி இடத்தில் மாநகராட்சி சார்பில் மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்டும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து  வருகிறது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பள்ளியில் பயின்று வரும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கடந்த ஜூலை மாதம் போராட்டம் நடத்தி, பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்ற தீர்ப்பிலும் பள்ளி வளாகத்தில் குடிநீர் தொட்டிகள் அமைக்க கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால், நேற்று மீண்டும் அந்த பள்ளியில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டும் பணிகள் நடப்பதை அறிந்த பெற்றோர்கள் தண்ணீர் தொட்டி கட்டும் இடத்தை முற்றுகையிட்டு  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மத்திய போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பள்ளி வளாகத்தில் குடிநீர் தொட்டி அமையாது. குடிநீர் தொட்டிக்கான பணிகளின் போது பாதிக்கப்படும் பள்ளி வகுப்பறைகள் சரி செய்யப்படும் என உறுதியளித்ததையடுத்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags :
× RELATED அமைச்சர் முன்னிலையில் பாஜவினர் 100 பேர்...