×

ஆசிரியர்களின் போராட்டத்தால் மாணவர்கள் கடும் பாதிப்பு

திருப்பூர், அக்.5: ஆசிரியர்கள் போராட்டத்தால் திருப்பூரில் நேற்று பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழை பென்சன் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நேற்று நடந்தது. திருப்பூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூரில் பெரும்பாலான ஆசிரியர்கள், இந்த போராட்டத்தில் பங்கேற்றதால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.  எஸ்.எஸ்.ஏ., ஆசிரிய பயிற்றுனர்கள், கருத்தாளர்கள், பகுதிநேர விளையாட்டு மற்றும் ஓவிய ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தால் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அங்கன்வாடி மைய பொறுப்பாளர்கள், மாணவர்களை கண்காணித்தனர். அதிக மாணவர் எண்ணிக்கை கொண்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், ஆசிரியர்கள் பற்றாக்குறை ஓரளவு சமாளிக்கப்பட்டது. துவக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையால், கற்பித்தல் பணி முற்றிலும் முடங்கியது.

Tags :
× RELATED தேர்தல் விதிமீறல் அரசியல் கட்சியினர் மீது வழக்கு