×

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்

ஊட்டி,அக்.5:  அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில்  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்  மேற்ெகாண்டதால், அரசு அலுவலகங்கள் வெறிச்ேசாடி காணப்பட்டன.    புதிய  பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழயை பென்ஷன் திட்டத்தை கொண்டு வர வேண்டும்.  மத்திய அரசின் 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை மாநில அரசு ஊழியர்கள் மற்றும்  ஆசிரியர்களுக்கு 1.1.2016 முதல் வழங்கும் வகையில் உடனடியாக மாநில அரசின்  8வது ஊதியக்குழு அமைக்க வேண்டும். முன்னதாக 20 சதவீதம் இடைக்கால நிவாரணம்  வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்ைககளை வலியுறுத்தி நேற்று அரசு  ஊழியர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   இதனால், நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் உட்பட அனைத்து  அரசு அலுவலகங்களிலும் குறைந்தளவே பணியாளர்கள் வந்திருந்தனர். அனைத்து அரசு  அலுலவலகங்களும் ெவறிச்சோடி காணப்பட்டன.  இதனால், பொதுமக்கள்  பாதிக்கப்பட்டனர்.  மேலும், கோரிக்கைளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம்  முன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

Tags :
× RELATED நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி...