×

திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க பொதுப்பணித்துறை ஆய்வு

அரியலூர்,அக்,5: திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மணல்குவாரி அமைக்க பொதுப்பணித்துறை ஆய்வு செய்தது. இதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று கொள்ளிட நீர்ஆதார பாதுகாப்புக்குழு வலியுறுத்தி உள்ளது.
திருமானுர் கொள்ளிடம் ஆற்றில் பொதுப்பணித்துறை செயல்படுத்தும் மணல் குவாரியானது, சுற்றுசூழல் துறையின் நிபந்தனைகள், விதிமுறைகளை பின்பற்றாமல் உயர்நீதிமன்றத்திற்கு உண்மைக்கு மாறான தகவல்களை அளித்து செயல்பட்டு வந்தது. இதனை கிராம மக்களும், விவசாயிகளும் பல்வேறு போரட்டங்கள் நடத்தி மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கும் தெரிவித்தனர். இதனையடுத்து அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலெட்சுமி தலைமையில்  நடத்திய அமைதி பேச்சுவார்த்தையின் போது. கொள்ளிட நீர் ஆதார பாதுகாப்பு குழு சார்பாக தலைவர் தனபால், கரும்பு விவசாய சங்க தலைவர் ராஜேந்திரன், வழக்கறிஞர் முத்துகுமரன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை விதிமுறைகளை மீறி மணல்குவாரி அமைத்துள்ளனர் என்று அதற்கான ஆதரங்களை காட்டினர். இதனையடுத்து திருமானூர் கொள்ளிட ஆற்றில் மணல்குவாரி அமைப்பதற்கு  தற்காலிக தடைவிதித்தார் கலெக்டர். மேலும் வல்லுனர் ஆய்வு செய்யவும் உத்திரவிட்டார். இந்நிலையில் நேற்று பொதுப்பணிதுறையினர் மணல் குவாரி அமைக்கும் பகுதியில் அறிவிப்பு பலகை அமைத்து, கொள்ளிடம் ஆற்றில் ஆய்வு செய்தது. அப்படி என்றால் விதிமீறல் உண்மை தானே? என்று கொள்ளிட நீர் ஆதார பாதுகாப்பு குழு கூறுகின்றனர். இவர்கள் எப்படி செய்தாலும் இயற்கையை அழித்தும், எட்டு மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரத்திற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் மணல் குவாரியை எதிர்கால நலன்கருதி தடை செய்ய தமிழக அரசையும், கலெக்டரையும் கொள்ளிட நீர் ஆதார பாதுகாப்பு குழு சார்பாகவும் மற்றும் 35 கிராம பஞ்சாயத்து மக்கள் சார்பாகவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags :
× RELATED பெரம்பலூர் /அரியலூர் கொள்ளை நோய் பரவலை...