×

ஆர்.எஸ்.புரத்தில் 24 மணி நேரம் குடிநீர்

கோவை, அக்.5:  கோவை ஆர்.எஸ்.புரத்தில் வரும் டிசம்பர் மாதம் முதல்ல 24 மணிநேரமும் குடிநீர் விநியோகிக்கும் திட்டம் துவங்கப்படும் என ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. கோவை மாநகராட்சி அலுவலகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணி, 24 மணி நேர குடிநீர் திட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் கோவை மாநகராட்சி கமிஷனர் விஜயகார்த்திகேயன், துணை கமிஷனர் காந்திமதி, மாநகர பொறியாளர் லட்சுமணன், செயற்பொறியாளர் (திட்டம்) ரவிச்சந்திரன், கோபாலகிருஷ்ணன் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்ட துறையினர்
பங்கேற்றனர். கூட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நகரில் உள்ள குளங்களை சீரமைக்கும் பணிகள் நடக்கிறது. இந்த பணியை வேகப்படுத்தவேண்டும். குளக்கரையில் உள்ள கட்டுமான கழிவுகளை அகற்றி சுத்தமாக்க வேண்டும். கரைகளில் தடுப்பு வேலி அமைக்க வேண்டும். குளங்களில் கழிவுகளை விடாமல் தடுக்க வேண்டும்.

சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என  தெரிவிக்கப்பட்டது. நகரில் 100 வார்டுகளில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகிக்கும் திட்ட பணிகளுக்கான சர்வே நடக்கிறது. இன்னும் 25 சதவீத சர்வே பணிகள் மீதம் உள்ளது. இந்த பணிகளை வேகமாக முடிக்கவேண்டும். ஆர்.எஸ்.புரம் வட்டாரத்தில் 24 மணி நேர குடிநீர் திட்டத்தை முதல் கட்டமாக துவக்க வேண்டும். வரும் டிசம்பர் மாதத்தில் ஆர்.எஸ்.புரம் வட்டாரத்தில் உள்ள பிரதான குடிநீர் குழாய், பகிர்மான குழாய்களை மாற்றி குடிநீர் இணைப்பு வழங்கவேண்டும். குடிநீர் குழாய்களை மாற்றும் போது குடிநீர் பற்றாக்குறை பிரச்னை ஏற்பட்டால் கண்காணிக்கவேண்டும் என இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Tags :
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்