×

அனைத்து கட்சிகள் முன்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சரிபார்ப்பு

திருப்பூர், செப். 26:  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரி பார்த்தல் பணி மற்றும் மாதிரி வாக்குப்பதிவு திருப்பூர் கலெக்டர் பழனிச்சாமி தலைமையில் நேற்று நடந்தது. திருப்பூர்  மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, தெற்கு, பல்லடம், அவிநாசி,  காங்கயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்ட மன்றத் தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலின் போது பயன்படுத்தப்படவுள்ள  5880 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3200 கட்டுப்பாட்டு இயந்திரம்  தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவற்றை பாரத் எலக்ட்ரானிக் நிறுவன  பொறியாளர்கள் நேற்று சரிபார்த்தனர். பின்னர், மாதிரி வாக்குப்பதிவு திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடந்தது.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி,  சப்-கலெக்டர் ஷ்ரவன்குமார், கலால் உதவி கமிஷனர் சக்திவேலு, தேர்தல் வட்டாட்சியர் முருகதாஸ்,  தெற்கு வட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி ஆண்டுவிழா