×

திருப்பூர் நிப்ட்-டி கல்லூரியில் பேஷன் டிசைன் கருத்தரங்கம்

திருப்பூர், செப். 26: திருப்பூர் நிப்ட்-டி கல்லூரியில் பேஷன் டிசைன் குறித்து கருத்தரங்கம் நேற்று நடந்தது.திருப்பூர், முதலிபாளையம் பகுதியில் அமைந்துள்ள நிப்ட்-டி பின்னலாடை வடிவமைப்புக் கல்லூரியில், காஸ்ட்டியூம் டிசைன் பேஷன் துறை மற்றும் அப்பேரல் பேசன் துறை சார்பில் சர்வதேச சந்தை வாய்ப்புகள் குறித்து சர்வதேச கருத்தரங்கம் ‘பேசன் டிசைன் 2020’ என்ற பெயரில் நடந்தது.கருத்தரங்கை கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன் மற்றும் துணை முதல்வர் தயாளராஜன் ஆகியோர் துவக்கி வைத்தனர். தொழில் முனைவோர் பயிற்சி வழிகாட்டுதல் தலைமை செயல் அதிகாரி பெரியசாமி கருத்தரங்கில் பங்கேற்று மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். கருத்தரங்கின் முக்கிய பேச்சாளராக நெதர்லாந்து நாட்டின் ‘பம்’ டிசைனிங் எக்ஸ்பர்ட் பெர்னடிட் டேம்யூஸ் பேசுகையில், `வரும் காலங்களில் ஆடை வடிவமைப்பில் ஏற்பட போகும் அபார வளர்ச்சி மற்றும் வாய்ப்புகளை கருத்தில் கொண்டு, நுண்ணறிவுடன் செயலாற்றும் முறைகள் பற்றியும், அதன் மூலம் சர்வதேச சந்தையில் உள்ள வாய்ப்புகளை எவ்வாறு கைப்பற்றுவது என்பது குறித்தும் விளக்கினார். இதில், பல்வேறு கல்லூரிகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்  கலந்து கொண்டனர்.
 

Tags :
× RELATED அமைச்சர் முன்னிலையில் பாஜவினர் 100 பேர்...