×

வணிக நிறுவனங்களில் சிசிடிவி கேமரா கடை உரிமையாளர்களுடன் போலீஸ் ஆலோசனை

திருப்பூர், செப். 26: வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்து கடை உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் திருப்பூரில் நேற்று நடந்தது. திருப்பூர் மாநகர போலீசுடன், ஸ்ரீபுரம் அறக்கட்டளை இணைந்து நகரப்பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைக்கும், ‘மூன்றாவது கண்’ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம், குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் எளிதாக கண்டறிகின்றனர்.
இத்திட்டத்தை அனைத்து பகுதியிலும் விரிவுபடுத்தும் வகையில், ‘வீதிக்கு ஒரு கண்’ என அறிமுகப்படுத்த, மாநகர போலீசார் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்த ஆலோசனை கூட்டம், திருப்பூர் டவுன்ஹால் அருகே நேற்று நடந்தது.
வடக்கு உதவி கமிஷனர் அண்ணாதுரை தலைமை வகித்தார். இதில், வணிக வளாக உரிமையாளர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், ‘கண்காணிப்பு கேமராக்கள் மூலம் திருப்பூர் நகரில் குற்றத்தடுப்பு, கண்டுபிடிப்பு ஆகியன எளிதாகி உள்ளன. அனைத்து பொது இடங்களிலும் கேமரா பொருத்த வேண்டும். இதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Tags :
× RELATED சட்ட பணிகள் குழுவுக்கு சட்ட தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம்