×

பொள்ளாச்சி சந்தையில் மாடு விற்பனை விறுவிறுப்பு

பொள்ளாச்சி,செப்.26: பொள்ளாச்சி சந்தைக்கு நேற்று மாடுகள் வரத்து குறைவாக இருந்தாலும், வியாபாரிகள் வருகை அதிகரிப்பால் விற்பனை விறுவிறுப்புடன் நடந்தது. பொள்ளாச்சியில் நேற்று நடந்த மாட்டு சந்தைக்கு வெளி மாநிலங்களில் இருந்து மாடுகள் வரத்து குறைவாக இருந்தாலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடு வரத்து ஓரளவு இருந்தது.கேரள வியாபாரிகள் வருகை அதிகமானது. இதனால், சில வாரத்திற்கு பிறகு நேற்று, மாடு விற்பனை விறுவிறுப்புடன் நடந்தது. பலரக மாடுகளை வியாபாரிகள் குறிப்பிட்ட விலை நிர்ணயித்து வாங்கி சென்றனர். இதில், காளைமாடு ரூ.35ஆயிரத்துக்கும், எருமை மாடு ரூ.32ஆயிரத்துக்கும், கன்றுகுட்டிகள் ரூ.12ஆயிரத்துக்கும்  விலைபோனதாக  வியாபாரிகள் தெரிவித்தனர்.


Tags :
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்