×

போலி இணையதளத்தை நம்பி ஏமாற வேண்டாம்

பொள்ளாச்சி, செப். 26:    பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட டாப்சிலிப்புக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து தினமும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அதிலும் விடுமுறை நாட்களில், அங்குள்ள விடுதியில் தங்குவதற்காக சுற்றுலா பயணிகள் வருகை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும்.அவ்வாறு டாப்சிலிப்பில் உள்ள விடுதிகளில் தங்குவதற்காக, ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பிலான இணைதளம் மூலம் புக்கிங் கடந்த சிலமாதமாக தொடர்ந்து நடக்கிறது. ஆனால், அனுமதியின்றி பல சுற்றுலா முகவர்களின்  மூலம் போலி இணையதளம் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இதுகுறித்து, ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கணேசன் விடுத்துள்ள அறிக்கை: நாட்டின் 29வது புலிகள் காப்பகமாக, ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகத்தில், சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக பல ஓய்வு இல்லங்கள் மற்றும் டார்மிட்டரிகள் உள்ளன. இதில் டாப்சிலிப்பில் யானை சவாரி வசதியும் உள்ளது.  ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள ஓய்வு இல்லங்களில் தங்குவதற்கான முன்பதிவு கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி முதல், ஆனைமலை புலிகள் காப்பக  இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், சில தனியார் சுற்றுலா முகவர்கள், புலிகள் காப்பகத்தில் உள்ள ஓய்வு இல்லங்களுக்கு  முன்பதிவு செய்து வருவதாக புகார் வந்துள்ளது.இப்படி, சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் நபர்களுக்கும், வனத்துறைக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது, இவர்களது இணையதளத்தை சுற்றுலா பயணிகள் அணுக வேண்டாம்.
ஆனைமலை புலிகள் காப்பகத்தின் அதிகார பூர்வ இணையதளமான www.atrpollachi,com என்ற இணையதளத்தை மட்டும் அணுக வேண்டும். அனுமதியின்றி செயல்படும் சுற்றுலா முகவர்களால் ஏற்படும் இழப்பை, வனத்துறை பொறுப்பு ஏற்காது’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு