சமாதான கூட்டத்தில் தீர்வு பாஜ உண்ணாவிரத போராட்டம் வாபஸ்

திண்டிவனம், செப். 26: திண்டிவனம் வட்டம் மயிலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ரெட்டணை,   பெரியதச்சூர், ஆலகிராமம் உள்ளிட்ட கிராமங்

களில் பாரத பிரதமரின் கழிவறை திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாககூறி மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து பாஜக இளைஞரணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே நேற்று உண்ணாவிரதம் குறித்த சமாதான கூட்டம் திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. தாசில்தார் பிரபு வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார். மயிலம் சப்-இன்ஸ்பெக்டர் எழிலரசி முன்னிலை வகித்தார். இதில் மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டீபன் ஜெய சந்திரா மற்றும் பாஜக இளைஞரணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மேற்கண்ட கிராமங்களில் கழிவறை கட்டும் திட்டத்தில் முறைகேடுகள் ஏதேனும் நடந்துள்ளதா என்பதை 15 நாட்களுக்குள் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது.

Related Stories: