பெண்களுக்கு எதிரான வன்முறைகள் விழுப்புரத்தில் விழிப்புணர்வு பிரசாரம்

விழுப்புரம், செப். 26:  கிராமப்புற பெண்களின் வேலைவாய்ப்பிற்கான தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட நிதி குறைக்கப்பட்டுள்ளதை உயர்த்த வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்தல், தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பதை தடுத்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இந்திய தேசிய மாதர் சம்மேளனம் சார்பில் இந்திய பெண்களின் பிரசார பயணம் நிகழ்ச்சி கடந்த 22ம் தேதி கன்னியாகுமரியில் துவங்கியது.

இந்த பயணத்தில் சம்மேளனத்தின் அகில இந்திய செயலாளர் ஆனிராஜா, தேசிய செயலாளர் நிஷாசித்து, வளர்ச்சி அதிகாரிகள் லீனாடாய்புரு, ஷப்னம் ஹஷ்மி, மாநில செயலாளர் பத்மாவதி ஆகியோர் பங்கேற்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் சம்பந்தமான விழிப்புணர்வு

பிரசாரம் செய்து வருகின்றனர்.விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் எதிரே வந்த இந்த குழுவிற்கு இந்திய தேசிய மாதர் சம்மேளன விழுப்புரம் மாவட்டம் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.மாவட்ட செயலாளர் வளர்மதி தலைமை தாங்கினார். துணை செயலாளர் மேரி, பொருளாளர் தேவி, தலைவர் தமிழ்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சபரிமாலா ஜெயகாந்தன், அம்பேத்கர் பேரவை மகளிரணி மாநில அமைப்பாளர் விஜயா, பெண்கள் முற்போக்கு கழக செயலாளர் செண்பகவள்ளி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் சரவணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். துணை தலைவர் மாரியம்மாள் நன்றி

கூறினார். இந்த குழு வரும் அக்டோபர் 15ம் தேதி புதுடெல்லியில் தங்களின் பயணத்தை நிறைவு செய்பின்றனர்.

Related Stories: