பருவமழை முன்னெச்சரிக்கை ஆய்வு கூட்டம் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை

கள்ளக்குறிச்சி, செப். 26: கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம் ஆகிய வட்டங்களை சேர்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு வடக்கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து ஆய்வு கூட்டம் கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது.

கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் தினேஷ் தலைமை தாங்கினார். வட்டாட்சியர்கள் தயாளன், இந்திரா, பன்னீர்செல்வம், தனி வட்டாட்சியர் சையத்காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையிடத்து துணை வட்டாட்சியர் கமலக்கண்ணன் வரவேற்றார். கூட்டத்தில் கோட்டாட்சியர் பேசுகையில், வட கிழக்கு பருவமழையானது எந்த நேரத்திலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஆகையால் அதிகப்படியான மழை பெய்கிற நேரங்களில் தண்ணீர் தேக்கி வைக்கக்கூடிய பகுதியான ஏரி, குளம் ஆகியவற்றை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நீர் நிலங்கள் ஆக்கிரமிப்பு பகுதியை பாகுபாடு இல்லாமல் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை வெள்ளங்கள் குறித்து பொதுமக்களிடம் எச்சரிக்கை செய்ய வேண்டும்.     தாழ்வான பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்து கொண்டு குடியிருப்பு வீடுகளில் மழைநீர் சூழும் நிலை ஏற்படும் பட்சத்தில் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க முன்னதாகவே இடம் தேர்வு செய்து அந்தந்த பகுதியில் உள்ள அலுவலர்கள் தயார்படுத்தி வைக்க வேண்டும். அதிக அளவில் மழை வெள்ளம் பாதிப்பு ஏற்பட்டால் கோட்டாட்சியர் மற்றும் அந்தந்த வட்டாட்சியருக்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கும் இடத்தில் பொதுமக்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மற்றும் கழிவறை, மின்தடை ஏற்படும் நேரங்களில் ஜெனரேட்டர் வசதி ஆகியவை தயார் நிலையில் வைத்

திருக்க வேண்டும். மழை காலங்களில் சம்பந்தப்பட்ட முதல்நிலை அலுவலர்கள் பொதுமக்களை பாதுகாத்திட எந்த நேரத்திலும் தயார் நிலையில் இருக்க வேண்டும், என்றார். கூட்டத்தில், சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories: