செயற்கை கால் உருவாக்கிய மயிலம் கல்லூரி மாணவனுக்கு பாராட்டு

விழுப்புரம், செப். 26: மயிலம் பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறையில் நான்காம் ஆண்டு படிப்பவர் மாணவர் முத்து. இவர் மாற்றுத்திறனாளி, முதியவர்கள் பயன்படுத்தும் வகையில் செயற்கை காலை வடிவமைத்துள்ளார். மூட்டு வலியால் அவதிப்படுவோரும், விபத்தினால் கால்களை இழந்தோரும் பயன்படுத்தும் வகையில் இந்த காலை வடிவமைத்துள்ளார். இந்த கால் உறுதியான உலோக சட்டங்கள் மற்றும் பல திருகு சுருள் (ஸ்விரிங்) கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை எளிமையாக அணிவதற்கும், கழற்றுவதற்கும் உதவும் வகையில் தோல் மற்றும் நைலான் பட்டைகளும் பயன்

படுத்தப்பட்டுள்ளது. இந்த காலை வடிவமைத்துள்ள மாணவன் முத்து, கல்லூரி முதல்வர் செந்தில், டீன் ராஜப்பன் மற்றும் துறை பேராசிரியர்கள் முன்னிலையில் செயல்விளக்கம் செய்து காண்பித்தார். இந்த கண்டுபிடிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் கல்லூரி தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன், துணைத்தலைவர் சுகுமாறன் எம்எல்ஏ, செயலாளர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் மாணவனை பாராட்டி ஊக்கத்தொகை வழங்கினர்.

Related Stories: