அடாக் ஊழியர்களும் எம்ஏசிபி

புதுச்சேரி, செப். 26: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  10 ஆண்டுகள் பணி முடித்து, பதவி உயர்வு அளிக்கப்படாத அரசு ஊழியர்களுக்கு  எம்ஏசிபி திட்டத்தின் கீழ் சம்பள உயர்வு அளிக்கப்பட்டு வந்தது. இத்திட்டத்துக்கான மத்திய அரசின் விதிமுறைகளின்படி அரசு  ஊழியர்கள் அடாக் முறையில் பணியாற்றிய காலம், இந்த திட்டத்தில் கணக்கில்  கொள்ளப்படாமல் இருந்தது. மத்திய அரசு ஊழியர்கள் அடாக் முறையில்  பணிபுரிவதற்கும், புதுவை மாநில அரசு ஊழியர்கள் அடாக் முறையில்  பணியாற்றுவதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது. மாநில அரசு ஊழியர்களுக்கு  நியாயமாக கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு கிடைக்கப் பெறாத நிலை ஏற்பட்டது. அடாக் முறையில் முதன்முதலில் பணிபுரிந்து பின்னர் பணி  முறைபடுத்தப்படுத்தப்பட்ட புதுவை மாநில அரசு ஊழியர்களுக்கு, அவர்கள்  பணிபுரிந்த காலத்தையும் எம்ஏசிபி திட்டத்தின் கீழ் சில  நிபந்தனைகளுக்குட்பட்டு கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என முடிவெடுக்கப்பட்டு அதற்கான ஒப்புதல் முதல்வரால் வழங்கப்பட்டுள்ளது.இதற்கான குறிப்பாணை விரைவில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்  துறையின் மூலம் வெளியிடப்படும். இதன் மூலம் அனைத்து துறையிலும் அடாக்  முறையில் பணிபுரிந்து, முறைபடுத்தப்பட்ட அரசு ஊழியர்கள் அனைவரும்  எம்ஏசிபி திட்டத்தின்கீழ் பயன்பெறுவர். அரசு ஊழியர்களின் கோரிக்கைகள்  பரிசீலிக்கப்பட்டு அவற்றை நிறைவேற்ற எங்கள் அரசு முனைப்புடன் செயல்படுகிறது  என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: