×

திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரிக்கு எதிர்ப்பு: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

அரியலூர்,செப்.26: திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடந்தது.திருமானூரில் கடந்த 30 வருடங்களாக மணல் குவாரிகள் அமைக்கப்பட்டு கொள்ளிடம் ஆற்றில் மண் வளம் சுமார் 30 அடி ஆழத்திற்கு அதிக அளவில் தோண்டப்பட்டும்   கொள்ளிடம் ஆற்றில் மணல் எடுத்துவிட்டது தமிழக அரசு. இதனால் கொள்ளிடம் ஆற்றில் 8 மாவட்டங்களுக்கு கொள்ளிடத்தில் ராட்சத ஆழ்துளை கிணறுகள் அமைத்து நீண்ட தூரம் குழாய் வழியாக தண்ணீர் எடுத்து செல்லப்படுகிறது. ஆற்றில் மணல் எடுப்பதினால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து 8 மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை உருவாகும். அரியலூர் மாவட்டம் திருமானூர்- தஞ்சை மாவட்டத்தை இணைக்கும் வகையில் சுமார் 1.30 கி.மீ தூரம் கட்டப்பட்ட பாலத்தில் தூண்கள் வெளியே தெரிய ஆரம்பித்து விட்டது.
கனரக வாகனங்களை இயக்க கூடாது என பலமுறை மனு அளித்துவிட்டோம். இதனையடுத்து திருமானூர் கொள்ளிடத்தில் மணல் குவாரி அமைக்க கூடாது. இறந்த சூர்யா குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் முடிந்த பின் எம்.ஜி.ஆர் சிலையிடம் மனு அளிக்க முற்பட்ட போது மணியன், தங்க சண்முகசுந்தரம், நாகராஜ் உள்ளிட்டோர் திருமானூர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க அரியலூர் மாவட்ட தலைவர்  மணியன் தலைமை வகித்தார்.
அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாய பிரிவு மாநில தலைவர் தங்கசண்முக சுந்தரம், மக்கள் சேவை இயக்க ஒன்றிய விவசாய சங்க பிரதிநிதி சி.நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED பயிர் சாகுபடிக்கு முன் மண் பரிசோதனை அவசியம் வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்