வக்பு வாரிய கல்லூரி அணி வெற்றி

மதுரை, செப். 26: மதுரை காமராஜர் பல்கலைக்கழக ‘ஏ’ மண்டல கல்லூரிகளுக்கு இடையேயான கபடி போட்டி, மதுரை வக்பு வாரியக் கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரிச்செயலாளர் ஆப்தாப் அகமது போட்டியை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் அப்துல்காதிர் தலைமை வகித்தார். இதில், வக்பு வாரியக் கல்லூரி, அமெரிக்கன் கல்லூரி, தியாகராஜர் கல்லூரி, மேலூர் அரசு கலைக்கல்லூரி உள்ளிட்ட 8 கல்லூரிகள் கலந்து கொண்டன. இறுதிப்போட்டியில் அமெரிக்கன் கல்லூரி அணி 29 புள்ளிகளும், வக்பு வாரியக்கல்லூரி அணி 37 புள்ளிகளும் பெற்றன. 8 புள்ளிகள் வித்தியாசத்தில் வக்பு வாரியக் கல்லூரி வெற்றி பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் மூஷா முபாரக் அலி செய்திருந்தார்.

Related Stories: