மாவட்டத்தில் கனஜோராக நடக்கும் கஞ்சா விற்பனை கட்டுப்படுத்துவது எப்போது?

மதுரை, செப். 26: மதுரை மாவட்டத்தில் போலீசாரின் நடவடிக்கை எடுத்தும், அஞ்சாமல் கஞ்சா விற்பனை தொடர்கிறது. இவர்களை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். மதுரையில் செல்லூர், கரிமேடு, தபால்தந்தி நகர், கூடல்புதூர், அவனியாபுரம், திருப்பரங்குன்றம், திருநகர் மற்றும் புறநகர் பகுதியான திருமங்கலம், வாடிப்பட்டி, சோழவந்தான், மேலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கஞ்சா விற்பனை தொடர்கிறது. போலீசார் சோதனை என்ற பெயரில், ஒரு சிலரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்ததாக கூறி வழக்கை முடிக்கின்றனர். ஆனால், கல்லூரி மாணவர்கள் மற்றும் முதியவர்கள் மூலம் கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது. எனவே, காவல் நிலையங்கள்தோறும் கஞ்சா விற்பவர்களின் பட்டியலை தயாரித்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மதுரை காளவாசல் பகுதியில் கரிமேடு போலீசார் ரோந்து சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த ஹரன் என்பவரும், கண்மாய்கரையைச் சேர்ந்த பஞ்சவர்ணம் (79) என்பவரும் டூவீலரில் வந்தனர்.

போலீசாரை பார்த்ததும் ஹரன் டூவீலரை நிறுத்திவிட்டு தப்பினார். பஞ்சவர்ணம் சிக்கினார். அவரது பையை போலீசார் சோதனையிட்டனர். இதில், மூன்றரை கிலோ கஞ்சா, ரூ.27 ஆயிரம் ரொக்கம் இருந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார் பஞ்சவர்ணத்தை கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய டூவீலர், கஞ்சா மற்றும் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய ஹரனை தேடி வருகின்றனர்.

இதேபோல, மதுரை வைகை வடகரையில், செல்லூர் போலீசார் ரோந்து சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த ராஜா மனைவி வனிதா (33), மேலத்ேதாப்பை சேர்ந்த வேலாயுதம் (18) ஆகியோர் கஞ்சா விற்றனர். இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த ஒன்றரை கிலா கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவ்வாறு போலீசார் நடவடிக்கை எடுத்தும் கஞ்சா விற்பனை மாவட்டத்தில் தொடர்ந்து நடந்து வரு

கிறது.

Related Stories: