தடையை மீறி மாநகராட்சி அலுவலகத்தில் ‘பேப்பர் கப்’ பயன்பாடு அதிகாரிகள் கவனிப்பார்களா?

மதுரை, செப். 26:  மதுரை மாநகராட்சி அலுவலகத்தில், தடையை மீறி, பேப்பர் கப் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.  மதுரையில் பாலிதீன் பைகளை பயன்படுத்த மாநகராட்சி தடை விதித்தது. குறிப்பாக மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி பிளாஸ்டிக் கப், பைகள் பயன்படுத்த தடையுள்ளது. இந்நிலையில், ‘யூஸ் அண்டு த்ரோ’ எனப்படும் பேப்பர் கப்களை பயன்படுத்தும் பொதுமக்கள், அவைகளை கோயிலைச் சுற்றிய பகுதிகளில் வீசி வந்தனர். இந்த பேப்பர் ‘கப்’கள் மழை நீர்வரத்துக் கால்வாய்களில் அடைத்து தண்ணீர் செல்வதிலும், தூர்வாருவதிலும் சிக்கல் ஏற்பட்டது. இது குறித்து கமிஷனர் அனீஷ்சேகரிடம் துப்புரவு தொழிலாளர்கள் முறையிட்டனர். இதையடுத்து மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி பேப்பர் கப்களை பயன்படுத்த கமிஷனர் தடை விதித்தார். இதேபோல, மாநகராட்சி மைய அலுவலகத்திலும் பேப்பர் ‘கப்’களுக்கு தடை உள்ளது. ஆனால், பலரும் தடையை மீறி பேப்பர் ‘கப்’களை பயன்படுத்துகின்றனர். இங்குள்ள கேண்டீனில் ேபப்பர் ‘கப்’களில் டீ, காபியை ஊற்றித் தருகின்றனர். வாங்கி வரும் பொதுமக்கள் மாநகராட்சி மைய அலுவலகத்தில் வைத்து குடிக்கின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள், அலுவலகத்தில் பேப்பர் கப்களை பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: