கோயில்களில் நீதிபதி ஆய்வு

சோழவந்தான், செப். 26:  ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவுப்படி தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோயில்களை நீதிபதிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதன்படி, குருவித்துறை சித்திரரத வல்லப பெருமாள் கோயில், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் மற்றும் திருவேடகம் ஏடகநாதர் கோயில்களில், மதுரை மாவட்ட கூடுதல் நீதிபதி மதுசூதனன் நேற்று மாலை ஆய்வு செய்தார். கோயில்களில் இருக்கும் கட்டமைப்பு, பாதுகாப்பு வசதி, பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். பின் கோயில் செயல் அலுவலகத்தில் அந்தந்த நிர்வாக அதிகாரிகளிடம் கோயில் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதி, கோயில் வளாகத்திற்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். பக்தர்களுக்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, நீதிமன்ற கோயில் ஊழியர்கள் மற்றும் எஸ்.ஐக்கள் சதீஷ்குமார் பாண்டி உடனிருந்தனர்.   

Related Stories: