கோயில் திருவிழாவில் குங்கும பூஜை

வத்தலக்குண்டு, செப். 26:  வத்தலக்குண்டு பத்ரகாளியம்மன் கோயில் புரட்டாசி திருவிழா கடந்த 24ம் தேதி துவங்கியது. அன்று காலையில் குத்துவிளக்கு பூஜை. மாலையில் அழகர்கோவில் தீர்த்தத்துடன் பூச்சொரிதல் ஊர்வலம் நடந்தது. நேற்று மாதர் சங்கம் சார்பில் கோயில் முன்பு குங்கும பூஜையும், மாலையில் பூசாரிகள் அழைப்பு நிகழ்ச்சியும் நடந்தன. தொடர்ந்து மஞ்சளாற்றிற்கு சென்று சக்தி கரகம் எடுத்து முன்வர அதை தொடர்ந்து அம்மன் ரதம் சிம்ம வாகனத்தில் வரும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பின் பக்தர்கள் மாவிளக்கு எடுக்கும் வைபவம் நடந்தது. இதில் நாடார் உறவின்முறை தலைவர் தயாளன், செயலாளர் பழனியப்பன், பொருளாளர் மதியழகன், ஓய்வு எஸ்ஐ மாடசாமி மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: