தலைமுறை கடந்து பலன் தரும் பனை விதைப்பு பணியில் ஆர்வம்

திண்டுக்கல், செப். 26:  அடுத்தடுத்த தலைமுறைக்கு பலன் தரும் பனைமரத்தை அதிகரிக்கும் நோக்கில் ரெட்டியார்சத்திரம் தாமரைக்குளத்தில் பனை விதைப்புப்பணியில் விவசாயிகள் ஆர்வமுடன் ஈடுபட்டனர். ரெட்டியார்சத்திரம் அருகேயுள்ள தாமரைக்குளம் சுமார் 250 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஒருகாலத்தில் பரவலாக நீர் தேங்கி இருந்ததுடன் செழிப்பான விவசாயமும் நடைபெற்று வந்தது. காலப்போக்கில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து நீர்வரத்து பாதைகள் அடைபட்டன. மேலும் தூர்வாராததால் கொள்ளளவும் குறைய துவங்கியது.இதனை மீட்டெடுக்க விரும்பிய விவசாயிகள் பொதுப்பணித்துறையுடன் இணைந்து தூர்வாரும் பணியை மேற்கொண்டனர்.

தொடர்ந்து கரையை பலப்படுத்தவும், மண்அரிப்பு ஏற்படாமல் இருக்கவும் பனை விதைகளை நட முடிவு செய்தனர். இதன்படி நேற்று இப்பணி துவங்கியது. மேலும் ஊரின் பல பகுதிகளிலும் பனை விதை நடவுப்பணி மும்முரமாக நடைபெற்றது. இதில் கிராமமக்கள் பலரும் ஆர்வமாக கலந்து கொண்டனர். இதுகுறித்து குடகனாறு பாதுகாப்பு பாசன அமைப்பு தலைவர் சபரியப்பன், விவசாய சங்க வட்டாரத் தலைவர் முருகானந்தம் ஆகியோர் கூறுகையில், ‘‘பனை பல்வேறு பயன்களை நெடுங்காலத்திற்கு தந்து கொண்டே இருக்கும். இம்மரம் வளர்ந்தால் நீர்நிலைகளின் கரைகள் பலப்படும். வரும் காலங்களில் மழைப்பொழிவை ஏற்படுத்தும். பதநீர், பனங்கற்கண்டு, பனங்கூழ் என்று பல்வேறு உணவுப்பொருட்களும், அலங்காரப்பொருட்களும் செய்யலாம். இதனால் இந்த மரத்தை தேவலோக மரத்திற்கு ஒப்பாகச் சொல்வர்.

Related Stories: