பாளையம்- திண்டுக்கல் இடையே ஆளில்லா ரயில் கிராசிங்கை அகற்றி பாலம் அமைக்கும் பணி மும்முரம்

குஜிலியம்பாறை, செப். 26:  பாளையம்-திண்டுக்கல் இடையே ஆளில்லாத ரயில்வே கிராசிங்கை அகற்றி பாலம் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. ஆளில்லா ரயில்வே கிராசிங் வழித்தடங்களில் ரயில்கள் கடந்து செல்லும் போது சில நேரங்களில் விபத்துகள் நடந்து உயிர்பலி ஏற்பட்டது. குறிப்பாக இரவுநேரங்களில் இந்த விபத்துகள் அதிகளவில் நடந்தது. இதை கருத்தில் கொண்டு ரயில்வே துறை, ஆளில்லா ரயில்வே கிராசிங்கை அகற்றி அவ்வழித்தடத்தில் பாலம் அமைக்க முடிவு செய்தது. அதன்படி, பாளையம்-திண்டுக்கல் இடையே ரயில் செல்லும் வழித்தடங்களில் உள்ள ஏராளமான ஆளில்லா ரயில்வே கிராசிங் அகற்றப்பட்டு பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

பாளையம்-எரியோடு ரயில் வழித்தடத்தில் ராமகிரி-உல்லியக்கோட்டை சாலையில் இருந்த ஆளில்லா ரயில்வே கிராசிங் அகற்றப்பட்டு பாலம் கட்டும் பணி முடிவடைந்தது. இதைதொடர்ந்து சுப்பிரமணியபிள்ளையூர், கூம்பூர் பிரிவு, பண்ணப்பட்டி, கருதனம்பட்டி ஆகிய இடங்களில் உள்ள ஆளில்லா ரயில்வே கிராசிங் அகற்றப்பட்டு பாலம் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதேபோல் எரியோடு-திண்டுக்கல் ரயில் வழித்தடத்தில் 2  இடங்களில் பாலம் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

Related Stories: