மனுக்களை அக்.2க்குள் அனுப்பலாம் அக்.10ல் பிஎப் குறைதீர் கூட்டம்

தூத்துக்குடி, செப். 26: நெல்லை தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தின் மண்டல ஆணையாளர்  சனத் குமார் நடத்தும் “வருங்கால வைப்புநிதி உங்கள் அருகில்” (வருங்கால வைப்புநிதி குறை தீர்க்கும்) கூட்டம் அக்.10ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து சனத்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:    நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வருங்கால வைப்புநிதி உறுப்பினர்கள் மற்றும் தொழிலதிபர்களின் குறைகள் ஏதேனும் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்தால் அவற்றை நிவர்த்தி ெசய்யலாம். அதற்கான மனுக்களை “மண்டல ஆணையாளர், வருங்கால வைப்புநிதி நிறுவனம், என்ஜிஓ‘பி’ காலனி, திருநெல்வேலி-7” என்ற முகவரிக்கு அனுப்ப  வேண்டும்.

மனுவின் ேமலே “வருங்கால வைப்புநிதி உங்கள் அருகில்” மற்றும் மனுதாரர்களின் தொலைபேசி எண் ஆகியவற்றை குறிப்பிட்டு அக்.2ம் தேதிக்குள் பிஎப் அலுவலகத்திற்கு கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். “வருங்கால வைப்புநிதி உங்கள் அருகில்” கூட்டம் வருங்கால வைப்புநிதி உறுப்பினர்களுக்கு அன்று காலை 10:30 மணி முதல் 1.00 மணி வரையும், தொழிலதிபர்களுக்கு மாலை 3 மணி முதல் 4 மணி வரையும், வருங்கால வைப்புநிதி விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மாலை 4 மணி முதல் 5 மணி வரையும் நடத்தப்படும். மனு அனுப்பியவர்கள் அக்.10ம் தேதி புதன்கிழமை அன்று மண்டல ஆணையாளரை நேரில் சந்தித்து தங்கள் குறைகளை நிவர்த்தி ெசய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.                             

Related Stories: