பிரதமர் திட்டத்தில் அனைவருக்கும் வீடு வழங்கக்கோரி கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் முற்றுகை

கோவில்பட்டி, செப். 26: பிரதமர் திட்டத்தில் அனைவருக்கும் வீடு வழங்கக்கோரி கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தை பாமகவினர் முற்றுகையிட்டனர்.  கோவில்பட்டி அருகே ஆலம்பட்டியில் பிரதமரின் அனைவருக்கும் வீடு  வழங்கும் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால்  குடியிருப்பு வீடுகள் கட்டப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ்  வீடு இல்லாத அனைவருக்கும் வீடுகள் வழங்க வலியுறுத்தி தூத்துக்குடி வடக்கு மாவட்ட  பா.ம.க.வினர் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முடிவுசெய்தனர்.   இதன்படி நடந்த இந்த முற்றுகை போராட்டத்திற்கு நகரச்  செயலாளர் காளிதாஸ் தலைமை வகித்தார். நகரத் தலைவர் ராஜபாண்டி, துணைத் தலைவர்  காளிராஜ், இணைச் செயலாளர் சண்முகராஜ், துணைச் செயலாளர் முருகன், பொருளாளர்  ஆதிலட்சுமி  முன்னிலை வகித்தனர்.

 மாநில துணைச் செயலாளர்  ராமச்சந்திரன், வடக்கு மாவட்டச் செயலாளர் வினோத்குமார், இளைஞர் அணி மாநில துணைத் தலைவர் மகாராஜன், மாவட்டத் தலைவர் சுஜீன், மாவட்டச் செயலாளர் சின்னமாரிமுத்து,  மாவட்ட துணைச் செயலாளர்கள் கருப்பசாமி, முனீஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்று கோரிக்கையை  வலியுறுத்தி கோஷமிட்டனர் .மேலும் பெண்கள் உள்ளிட்ட  ஏராளமானோர் பங்கேற்றனர். பின்னர் கோரிக்கை மனுவை  நகராட்சி ஆணையாளர் அச்சையாவிடம் அளித்து சென்றனர்.

Related Stories: