கயத்தாறில் புதிய பயணிகள் நிழற்குடை

கயத்தாறு, செப். 26: கயத்தாறில் பழைய பஸ் நிறுத்தத்தில் புதிய பயணிகள் நிழற்குடையை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்துவைத்தார்.   கயத்தாறில் பழைய பஸ் நிறுத்தம் பகுதியில் தொகுதி மேம்பாட்டு  நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நவீன பயணிகள் நிழற்குடை திறப்பு விழா கலெக்டர் சந்தீப்  நந்தூரி தலைமையில் நடந்தது. பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மாகின்  அபுபக்கர், உதவி செயற்பொறியாளர் முகமது சரிப்  முன்னிலை வகித்தனர்.  கயத்தாறு பேரூராட்சி செயல் அலுவலர் அழகர் வரவேற்றார்.  சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சர் கடம்பூர்  ராஜூ, புதிய நிழற்குடையை திறந்து வைத்

தார்.

அப்போது கயத்தாறு நூலக வாசகர் வட்ட  தலைவர் கணேசன் ஊர் மக்கள் சார்பில் கயத்தாறு நூலகத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்ட இடம்  ஒதுக்கீடு செய்யக்கோரியும், கயத்தாறு ஊருக்குள் வராத  அரசு பஸ்கள் ஊருக்குள் வந்துசெல்ல வலியுறுத்தியும் மனு கொடுத்தார். இதுகுறித்து கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அனைத்து பஸ்களும் கயத்தாறு ஊருக்குள்  வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கிளைநூலகம் கட்ட விரைவில் நடவடிக்கை  எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ உறுதியளித்தார்.   விழாவில் கோவில்பட்டி ஆர்டிஓ விஜயா, கயத்தாறு  தாசில்தார் லிங்கராஜ், ஆர்ஐ செல்வராணி, விஏஓ ராஜசேகர், முன்னாள்  ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், அதிமுக கயத்தாறு நகரச் செயலாளர் ராமசாமி, இலக்கிய அணி அல்லிக்கண்ணன், ஜிந்தாதுரை மற்றும் கட்சியினர்  என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories: