நிர்வாக காரணத்தால் மாற்றம் நிலத்தடிநீரை பாதுகாக்க அரியாற்றில் தண்ணீர் திறக்க வேண்டும்

திருச்சி, செப்.25: நிலத்தடி நீராதாரத்தை பாதுகாக்க அய்யன் வாய்க்கால், அரியாறு, கட்டளை வாய்க்காலிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டுமென விவசாய சங்கங்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் ராஜாமணியிடம், லால்குடி ஒன்றிய ரஜினி மககள் மன்ற செயலாளர் மாறன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

முக்கொம்பு மேலணை மதகுகள் உடைந்து ஒரு மாதமான நிலையில் இதுவரை அய்யன்வாய்க்காலில் உரிய அளவு தண்ணீர் திறந்துவிடவில்லை. இதனால் 20 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்துள்ள கரும்பு, வாழை, நெற்பயிர்கள் கருகும் அபாயம் உள்ளது. வரும் தண்ணீர் பல்வேறு இடங்களுக்கு திருப்பி விடப்படுகிறது. மின்சாரமும் முறையாக கிடைப்பதில்லை. எனவே போதிய தண்ணீர் கிடைக்கவும், முறையாக மின்சாரம் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தமாகா மாநில விவசாய அணி தலைவர் புலியூர் நாகராஜன் அளித்த மனுவில், ரங்கம் தாலுகா மணிகண்டம் ஒன்றியம் கட்டளைமேட்டு வாய்க்கால் பாசன பகுதிகளான தாயனூர், சுண்ணாம்புக்காரன்பட்டி, கொய்யாத்தோப்பு, போசம்பட்டி சின்னக்குளம், எட்டரை, போதாவூர், புலியூர் அதவத்தூர், அல்லித்துறை சாந்தபுரம் பகுதிகள் 10 ஆயிரம் ஏக்கருக்கு இதுவரை சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. இதனால் வயல்கள் காய்ந்து காணப்படுகிறது. கலெக்டர் நேரில் பார்வையிட்டு பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சின்னதுரை அளித்த மனுவில், புதிய கட்டளைகால்வாய் நவலூர் பிரிவிலிருந்து அரியாற்றில் பிராட்டியூர் வரை ஆண்டுதோறும் நிலத்தடி நீரை பாதுகாக்க தண்ணீர் திறந்துவிடுவதுபோல, இந்த ஆண்டும் தண்ணீர் திறந்துவிட்டால் தான் அரியாற்றின் மூலம் நிலத்தடி நீராதாரம் பாதுகாக்கப்பட்டு, விவசாயப் பணிகள் தொடங்க வழி கிடைக்கும்.

கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி அமைச்சர் வளர்மதி, கலெக்டர் ஆகியோர் ஆய்வு செய்து, அரியாற்றில் நிலத்தடி நீரை பாதுகாக்க உத்தரவிட்டும் பொதுப்பணித்துறையினர் உத்தரவை செயல்படுத்தாதது பொதுமக்களை போராட்டத்துக்கு தூண்டும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பாசனத்துக்கும், நிலத்தடி நீரை பாதுகாக்கவும் தண்ணீர் திறக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். முக்கொம்பு மேலணை மதகுகள் உடைந்து ஒரு மாதமான நிலையில் இதுவரை அய்யன்வாய்க்காலில் உரிய அளவு தண்ணீர் திறந்துவிடவில்லை. இதனால் 20 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்துள்ள கரும்பு, வாழை,

நெற்பயிர்கள் கருகும் அபாயம் உள்ளது.

விவசாய சங்கங்கள் மனு என்எஸ்எஸ் மாணவர்கள் தூய்மைப்பணி திருச்சி பிஷப்ஹீபர் மேல் நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் வயலூர் ரோட்டில் குப்பை, கழிவுகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: