திருச்சி மாவட்ட குங்பூ அணிக்கு பாராட்டு

திருச்சி, செப்.25: தமிழக ஜூனியர், சீனியருக்கான சைனீஸ் குங்பூ சாம்பியன்ஷிப் போட்டிகள் கோவை அக்சயா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்தது. திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவியர் 21 பேர் பங்கேற்றனர். பல்வேறு சண்டை, பாட பிரிவுகளில் வெற்றி பெற்றனர். இதில் தமிழக அளவில் திருச்சி மாவட்ட அணி 2ம் இடத்தை பிடித்தது. அந்த அணியினர் திருச்சி கலெக்டர் ராஜாமணியை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் புண்ணியமூர்த்தி, திருச்சி மாவட்ட ஊஷூ சங்கம் மாநில துணைத்தலைவர் வசுதேவன், செயலாளர் புஷ்பா, அணி பயிற்சியாளர் வெங்கட், மேலாளர் ஹரன், பொறுப்பாளர் சைவராசு ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: