×

780 மாணவ, மாணவிகள் திறனாய்வு தேர்வு எழுதினர்

தா.பேட்டை, செப்.25: முசிறி கல்வி மாவட்டத்தில் 3 இடங்களில் நடைபெற்ற ஊரக திறனாய்வு தேர்வில் 780 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். முசிறி கல்வி மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஊரக திறனாய்வு தேர்வு நடைபெற்றது. எட்டாம் வகுப்பு தேர்வில் 85 சதவீதம் மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள் இத்தேர்வில் கலந்து கொண்டனர். இத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் பனிரெண்டாம் வகுப்பு வரை மாதம் ரூபாய் ஆயிரம் கல்வி உதவி ஊக்கத்தொகையாக வழங்கப்படும். முசிறி கல்வி மாவட்டத்தில் ஊரக திறனாய்வு தேர்வு நேற்றுமுன்தினம் முசிறி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளி, துறையூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட மூன்று இடங்களில் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் 296 மாணவர்கள், 484 மாணவிகள் என மொத்தம் 780 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். தேர்வு மையங்களை முசிறி கல்வி மாவட்ட அலுவலர் பாலசுப்ரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பள்ளி தலைமையாசிரியர்கள் தேர்வை நடத்தினர்.

Tags :
× RELATED மணப்பாறை அருகே தொழிலாளி வீட்டில் நகை, பணம் கொள்ளை