கீழபொய்கைபட்டி கிராமத்தில் என்சிசி மாணவர்கள்

தூய்மைபணிமணப்பாறை, செப்.25: மணப்பாறை தியாகேசர் ஆலை மேல்நிலை பள்ளி சார்பில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. மணப்பாறை கோவில்பட்டி ரோட்டில் தியாகேசர் ஆலை மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் தேசிய மாணவர் படையைச் சேர்ந்த இரண்டாவது இரும்பு கவச அணி சார்பில் கீழப் பொய்கைப்பட்டி கிராமத்தை தூய்மைப்பணிக்காக தத்து எடுத்தனர். இதனையடுத்து நேற்று தேசிய மாணவர் படையின் மானவர்கள் சார்பில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது. இதில், பள்ளி தலைமையாசிரியர் லோக.அருளரசன், கர்னல் சாபு, ஜே.சி.ஓ. லோகநாதன் மற்றும் அவில்தார் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு தூய்மைப்பணியை துவக்கி வைத்தனர். இந்த தூய்மைப்பணியில் தேசிய மாணவர் படையைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். தூய்மைப்பணி அரசு நடுநிலைப்பள்ளி மைதானம், கீழவீதி, மேலவீதி, மற்றும் நடுவீதி ஆகிய தெருக்களில் நடைபெற்றது. மேலும் கோவில் பகுதியில் உள்ள குப்பைகள் மற்றும் முட்புதர்களை அகற்றி சுத்தம் செய்து தூய்மைப் பணியை முடித்தனர். தேசிய மாணவர் படை அதிகாரி முத்துக்குமார் நன்றி கூறினார்.

Related Stories: