வாக்காளர் பெயர்சேர்த்தல் முகாம் முசிறி தொகுதியில் 1,374 பேர் மனு

தா.பேட்டை, செப்.25: முசிறி தொகுதியில் நடைபெற்ற வாக்காளர் பெயர் சேர்க்கும் முகாமில் 1,374 பேர் உரிய படிவங்களை கொடுத்து பயன் பெற்றனர். அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் முகாம் அமைக்கப்பட்டிருந்தது. முசிறி தொகுதியில் புதிய வாக்காளர்களுக்கான படிவங்களை 1004 பேரும், நீக்கலுக்கு 109 பேரும், முகவரி மாற்றத்திற்கு 179 பேரும், வார்டு மாற்றத்திற்கு 82 பேரும் சேர்த்து 1,374 பேர் அதற்குரிய படிவங்களை கொடுத்து பயன்பெற்றனர். முகாம் அமைக்கப்பட்டிருந்த இடங்களை ஆர்டிஓ ரவிச்சந்திரன், தாசில்தார்கள் சுப்ரமணியன், பிரகாஷ், தேர்தல் துணை வட்டாட்சியர் தனபாக்கியம் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பார்வையிட்டு உரிய ஆலோசனைகள் வழங்கினர்.

Related Stories: